உலக தலித் இலக்கியத்தின் பிதாமகன்:
சினுவா
ஆச்செபே (1930 – 2013)
ஜி.குப்புசாமி
1
சமீபத்தில் தமிழின் பிரபல
வார
இதழ்
ஒன்றில் நைஜீரிய எழுத்தாளர் சினுவா
ஆச்செபேவுக்கு முழுப்பக்க அஞ்சலிக் குறிப்பு வந்திருந்தது. மறைந்த
நவீனத்
தமிழ்
எழுத்தாளர்கள் பலருக்கும் கிடைக்காத பாக்கியம் தனக்குக் கிடைக்காத பாக்கியம் தனக்குக்
கிடைத்ததை நினைத்து ஆச்செபே சொர்க்கத்தில்
பெருமிதம் அடைந்திருக்கக்கூடும். கடைசிவரை நோபல்
பரிசு
கிடைத்திராத ஏமாற்றம்கூட சற்றே
தணிந்திருக்கும் என்று
நம்பலாம்.
மேற்படி கிண்டல் தொனி
சினுவா
ஆச்சிபியினுடை யதுதான். அவரது
புகழ்பெற்ற Things Fall Apart (தமிழில், மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் 'சிதைவுகள்') நாவல்
ஒடுக்கப்பட்ட இனத்தின் சுய
பிரகடனம் மட்டுமல்ல, ஆதிக்க
இனத்தவரைப் பார்த்து அவர்கள் பாணியிலேயே நாக்கை
வெளியே
துருத்திக் காட்டுகிற எள்ளலும்கூட
என்பது
நாவலின் கடைசிப் பகுதியில் தெரியவருகிறது. ஒகாங்க்வோ என்ற
இந்நாவலின் நாயகன்
காலனிய
சக்திகளுக்கு எதிராக,
தனது
பாரம்பரிய பண்பாட்டு வேர்களைக் காத்துக் கொள்வதற்கு நடத்தும் கடுமையான போராட்டத்தில் தோற்று
வீழ்த்தப்படுகிறான். உலகின் ஆதிக்குடியினரின் பல்லாயிர வருடப்
பழமையான பண்பாடும், அதன்
நூற்றுக்கணக்கான கடவுளர்களும், வழிபாட்டு நியமங்களும் துடைத்தழிக்கப்பட்டு, ஆதிக்க
இனத்தவரின் மதத்திற்கு அவர்கள் மாற்றம் செய்யப்படும்போது இந்த
வீழ்ச்சியின் சுற்று
முழுமைபெறுகிறது.
நாவல்
இந்தக்
கட்டத்தில் முடிவுபெறுவதில்லை. அந்த
வெள்ளைய கவர்னருக்கு தான்
எழுதப்போகும் 'நைஜரின் தாழ்நிலத்தொல்
பழங்குடி இனத்தவரிடையே அமைதி
உண்டாக்கல்' என்ற புத்தகத்திற்கு ஒகாங்க்வோவின் கதையைச் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று
தோன்றுகிறது. அதுவும் “ஒரு
முழு
அத்தியாயமாக அல்ல,
ஒரே
ஒரு
பத்தியாக மட்டும்!” இந்த
முத்தாய்ப்புதான் ஆப்பிரிக்காவைப் பற்றி
வெள்ளை
இனத்தவர் கொண்டிருந்த பார்வையை நிதரிசனமாக்குகிறது.
2
சினுவா
ஆச்செபேயின் Things Fall Apart, 1958 -ஆம் வருடம் வெளிவந்தது. இருண்ட
கண்டம்
என்று
ஒற்றைப் பரிமாணத்தில் ஆப்பிரிக்காவை இளக்காரமாக வர்ணித்துவரும் மேலை
நாட்டினரின் இலக்கியங்களில் உண்மையான ஆப்பிரிக்காவும், அதன்
குணாம்சங்களும், கலாச்சார விழுமியங்களும் சித்திரிக்கப்பட்டிருக்கவேயில்லை என்பதை
ஆச்செபேயின் இந்த
முதல்
நாவல்
உலகிற்குப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியது. இந்த
நாவல்
வெளிவருவதற்குமுன் ஆப்பிரிக்காவைக் களமாகக்கொண்டு ஆப்பிரிக்கர்களின் வாழ்வைப் பதிவு
செய்ததாகக் குறிப்பிடப்படும் இரண்டு
நாவல்கள் ஆங்கிலோ-ஐரிஷ்
எழுத்தாளரான ஜாய்ஸ்
கேரியின் ‘மிஸ்டர் ஜான்சன்' மற்றும் ஜோசப்
கான்ராடின் Heart of Darkness. ஜாய்ஸ்
கேரி
தனது
நாவலில் ஆப்பிரிக்காவின் மீதும்
அதன்
கருத்த
தோலுடைய மனிதர்களின் மீதும்
தனக்கிருக்கும் அருவருப்பைப் பச்சையாகவே வெளிப்படுத்திவிடுகிறார். அது
ஓர்
உதாரண
வெள்ளையனின் மேட்டிமைப் பார்வை.
ஆப்பிரிக்கர்களை 'பொறாமை
மலிந்த
காட்டுமிராண்டிகள், அரண்மனையின் அடித்தளத்தில் திரியும் அழுக்கு எலிகள்,
பல்லிளித்துக்கொண்டு கிறீச்சிட்டுக் கத்தி
ஊளையிட்டுக் கொண்டு
முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு நடனம்
என்ற
பெயரில் ஆபாசமாகக் குதிப்பவர்கள், விவேகமற்ற அறிவற்ற மனிதர்கள் என்று
அழைக்கத் தயங்கும்படியான மிருகங்கள்...' என்றெல்லாம் பக்கம்
பக்கமாக வெறுப்பை உமிழும் 'மிஸ்டர் ஜான்சன்' நாவலை
ஆப்பிரக்காவைப் பற்றி
எழுதப்பட்ட ஆகச்
சிறந்த
நாவல்
என
'டைம்'
இதழ்
பாராட்டுகிறது! ஆனால்
ஜோசப்
கான்ராட் ஜாய்ஸ்
கேரியைப் போல
விதரணையற்றவர் அல்ல.
நாசூக்கானவர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர்
என
ஸ்தாபிக்கப்பட்டிருப்பவர். அவரது
Heart of Darkness சென்ற
நூற்றாண்டின் செல்வாக்கான ஆறு
நாவல்களில் ஒன்று
என
ஆங்கிலேய இலக்கிய இதழ்களால் நிறுவப்பட்டிருக்கிறது.
இத்தகைய புகழ்பெற்ற நாவலில் கான்ராட், கேரிக்கு சற்றும் சளைக்காமல் கருப்பர்களைப் பற்றியும், அவர்களது 'காட்டுமிராண்டி' கலாச்சாரத்தைப் பற்றியும் வாழைப்பழத்தில் ஊசி
ஏற்றுவதைப் போல
ஒவ்வொரு பக்கத்திலும் அவரது
அசூயையும், வன்மத்தையும் பரப்புகிறார். இதற்கு
அவர்
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் வார்த்தைகள் அலாதியானவை பெரும்
மேதைதான் அவர்.
அதுவும் என்ன
மாதிரியான மேதை!
(இந்த
இடத்தில் கான்ராடின் நாவலை,
அதன்
கருப்பின துவேஷத்தை அக்கக்காகப் பிரித்துக்காட்டி சினுவா
ஆச்செபே எழுதிய An Image of Africa: Racism in
Conrad's Heart of Darkness' என்ற
அபாரமான கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்து இணைக்க
வேண்டுமென எனக்கு
இச்சையாக இருக்கிறது. ஆர்வமுள்ள வாசகர்கள் இணையத்தில் தேடி
வாசித்துக் கொள்ளலாம்).
3
ஆப்பிரிக்கர்களை எதிர்மறையாகவே சித்திரித்து வரும்
மேற்கத்திய பாரம்பரியம் குறித்து ஆச்செபே தெரிவித்திருக்கும்
கருத்துகள் முக்கியமானவை. “இருப்பதை அப்படியே நிலைநிறுத்தச் செய்யும் நேரடி
முயற்சிக்கு உதாரணம் இது”
என்று
ஒரு
நேர்காணலில் குறிப்பிடுகிறார். அட்லாண்டிக் மந்த்லி' இதழுக்கு அளித்த நேர்காணலில் இதைப்பற்றி மேலும்
பேசும்போது, கடந்த
நான்கு
அல்லது
ஐந்து
நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவுடனிருந்த ஐரோப்பியத் தொடர்புதான் ஆப்பிரிக்கர்களை மிகக்கேவலமாகச் சித்திரிக்கும் இலக்கியங்களை ஏராளமாக உற்பத்தி செய்திருப்பதற்குக் காரணம்
என்கிறார். “அடிமை
வாணிபத்தையும் அடிமை
முறையையும் நியாயப்படுத்துவதே இவற்றின் நோக்கம். இந்த
அடிமை
வாணிபத்தின் கொடுமைகள் ஐரோப்பாவில் கணிசமானவர்களைச் சங்கடப்படுத்தத் தொடங்கி, சிலர்
எதிர்த்துப் போராடவும் ஆரம்பித்துவிட்டபின் இந்த
லாபகரமான அடிமை
வணிகர்கள் அதனை
நியாயப்படுத்தத் தொடங்கினர். கான்ராட், கேரி
போன்றோரின் நாவல்களை இந்த
சமாதான
யத்தனங்களுக்கான லாபி
என்றுதான் நாம்
பார்க்க வேண்டும்... இந்த
விஷயம்
சமாதானப் படுத்திக் கொள்ளவும் நியாயப்படுத்திக்கொள்ளவும் கடினமாக இருந்ததால், 'இந்த
மனிதர்கள் எல்லாம் உண்மையில் மனித
இனத்தவரே அல்ல,
நம்மைப் போன்றவர்கள் என்று
பார்க்க முடியாது' என்றெல்லாம் குரூரமான சமாதானங்களை முன்வைத்தவர்களையும் பார்க்க முடிகிறது. 'அடிமைகளாக அவர்களை விற்றதால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு நன்மைதான் விளைந்திருக்கிறது; இல்லாவிட்டால் நாகரிக
வாசனை
அறியாமல் மிருகங்களாகவே இருந்திருப்பார்கள்' என்று
ஒரு
பொதுக்கருத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியதுதான் இவர்களின் சாதனை…
எனவே,
ஆப்பிரிக்காவைப் பற்றிய
இலக்கியத்தின் நோக்கமே இதுதானென்று ஆகிவிட்டபின் 19-ஆம்
நூற்றாண்டில் அடிமை
வாணிபம் தடைசெய்யப்பட்ட பிறகும்கூட ஆப்பிரிக்காவின் மீதான
புதிய
ஐரோப்பிய ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக இத்தகைய இலக்கிய முயற்சிகள் தொடர்ந்தன....”
4
இப்படிப்பட்ட சூழல் நிலவிவந்த காலத்தில்தான் Things Fall Apart வெளிவந்தது. (இந்நாவலைத் தொடர்ந்து வந்த
No Longer at Ease, Arrow of God ஆகிய
நாவல்களை சேர்த்து ஒரு
முக்கதைத் தொகுதி
எனக்
கருதலாம்). அந்நியர்களுக்கு ஒருபோதும் விளங்கிடமுடியாத ஒரு
தொல்குடியின் வாழ்வை
அதன்
மனிதர்களில் ஒருவரே
எழுதும்போது கிடைக்கும் சத்திய
தரிசனம்தான் Things Fall Apart இல்
'உலகிற்கு வாசிக்கக்
கிடைத்தது. உலக தலித்
இலக்கியத்தின் பிதாமகனாக சினுவா
ஆச்செபே விளங்குவதும் இதனால்தான்.
ஆச்செபே ஆங்கிலத்தில் எழுதுவதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. என்கோஸி வா தியாங்கோ
கூட ஆச்செபே இக்போ
மொழியில் எழுதாதற்காக ஆட்சேபித்திருக்கிறார். (வா
தியங்கோ முதலில் வேறொரு
பெயரில் ஆங்கிலத்தில் எழுதிவந்தவர். பின்னர் மனமாற்றம் அடைந்து அவரது
தாய்மொழிப் பெயரில் தனது
தாய்மொழியிலேயே எழுதத் தொடங்கினார்).
”இந்நாவலை உங்கள் தாய்மொழியிலேயே எழுதியிருந்தால் இதைவிடச் சிறப்பாக எழுதியிருக்க முடியுமல்லவா? உங்கள்
நாட்டவர்களிடம் இதைவிட
அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமே?” என்று
அவரிடம் யுனெஸ்கோ கூரியர் இதழ் நேர்காணலில் கேட்டபோது அவர்
அளித்த
பதில்
இதுதான்:
“கண்டிப்பாக இருக்காது, அதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
எனது
நாட்டவர்களான நைஜீரியர்கள் எல்லோருமே இக்போ மொழி பேசுபவர்கள் அல்லர்.
பிரதானமான இனக்குழுக்களில் ஒன்றுதான் இக்போக்கள் Things Fall Apart-ஐ
இக்போவில் எழுதியிருந்தால் இக்போக்கள் மட்டுமே வாசித்திருப்பார்கள், யோருபாக்களோ,
ஹாவுஸாக்களோ, இபிபியோக்களோ அல்லது
மற்ற
ஆப்பிரிக்கர்களான கிகியூக்களோ, லூவோக்களோ, இந்தக்
கண்டத்தில் பரவியிருக்கும் மற்ற
இனத்தவரோ அதை
வாசித்திருக்க மாட்டார்கள். இந்த.
நாவல்
ஆப்பிரிக்கக் கண்டம்
முழுக்கப் பரவலான
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இக்போவில் எழுதியிருந்தால் இது
சாத்தியப்பட்டிருக்காது. உங்கள்
திறமையின் சக்தியை ஒரு
ஆப்பிரிக்க மொழிக்கு மட்டும் அளித்திருந்தால் அங்கே
ஒரு
புதிய
இலக்கிய எழுச்சி உருவாக
உதவியிருக்கும் என்பது
உண்மைதான். இதற்கான பதில்,
நீங்கள் எப்படிப்பட்ட குணாம்சங்களைக் கொண்டவர் என்பதையும், இலக்கியம் செய்யவேண்டியது என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் பொறுத்தது.”
ஆங்கிலத்தில் எழுதுபவராக இருந்தாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ‘சுத்த பத்தமான’ மொழியில்
எழுதுவதை தான்
விரும்பவில்லை என்று
The African Writer and the English
Language என்ற 1965-ஆம்
வருட
கட்டுரையில் ஆச்செபே எழுதுகிறார். “ஆப்பிரிக்க எழுத்தாளன் பயன்படுத்தும் ஆங்கிலம் உலகளாவிய விதத்தில் வாசிக்கக்கூடியதாகவும், அதேசமயத்தில் அவனது
தனித்துவ அனுபவங்களின் பாரத்தை ஏற்றியிருப்பதாகவும் இருக்க
வேண்டும்,” என்று
கூறிவிட்டு அதனை
விளக்குவதற்காக அவரது
Arrow of God நாவலிலிருந்து சில
பகுதிகளை உதாரணமாகக் காட்டுகிறார். கிராமத்தின் தலைமை
பூசாரியான எசுவூலு கிராமத்திற்கு வந்திருக்கும் புதிய
மிஷனரிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். இந்த
நாவலில் ஆச்செபே எழுதியிருக்கும் வரிகள்
இவை: I want one of my sons to join
these people and be my eyes there. If there is nothing in it, you will come
back. But if there is something, then you will bring home my share. The world
is like a mask, dancing. If you want to see it well, you do not stand in one
place. My spirit tells me that those who do not befriend the white man today
will be saying had we known tomorrow.
இதே
வரிகளை
அர்த்தம் மாறாமல் ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி
ஜீவனிழந்து, வேர்ப்பிடிப்பற்றுக் காணப்படும் என்பதை
எழுதிக்காட்டுகிறார்: I am sending you as my
representative among these people-just to be on the safe side in case the new
religion develops. One has to move with the times, or else, , one is left
behind. I have a hunch that those who fail to come to terms with the white man
may well regret their lack of foresight.
வழக்கமான சொற்றொடர்களை, பழக்கப்பட்டிராத வகைகளில் பயன்படுத்துவதன் மூலம்
ஆச்செபே அவரது
பாத்திரங்களை ஆங்கில
மொழியின் கூடவே
ஒட்டியிருக்கும் ஆங்கிலோ ஸாக்ஸன் கலாச்சாரப்பிடியிலிருந்து விடுவித்துத் தனது
சொந்தக் கால்களில் நிற்க
வைக்கிறார் என்பதற்கு உதாரணம் இதுதான். எசுவூலு பயன்படுத்தும் ‘be my eyes’ , ‘bring home my share' என்பவற்றிற்கு
ஆங்கிலத்தில் சமமான ஆங்கில வார்த்தைகள் இல்லை. 'My spirit tells me' என்பதற்கும்
‘I have a hunch' என்பதற்கும் இடையே இருக்கின்ற மகத்தான இடைவெளியைத்தான் ஆச்செபே அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
நைஜீரிய தேசிய
மொழிகளில் ஒன்றான
இக்போவில் வழங்கும் ஒரு
தொல்கதையை ஆச்செபே ஒரு
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கடவுளர்களில் தலையாயவரான சுக்கு
கடவுளிடம் வரம்
ஒன்றைக் கேட்டுப் பெறுவதற்குத் தூதனாக
நாய்
ஒன்றைத் தேர்ந்தெடுக்கின்றனர். இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று வரவேண்டும் என்பதுதான் கோரிக்கை. நாய்
உடனே
செல்லாமல் சோம்பலுடன் தாமதிக்க, ஒட்டு
கேட்டுக்கொண்டிருந்த தேரை
ஒன்று
கடவுளிடம் செல்கிறது. தேரைக்கு மனிதர்கள் மீது
விரோதம். எனவே,
கடவுளிடம் கோரிக்கையை மாற்றி,
மனிதர்கள் இறந்த
பிறகு
மீண்டும் உலகிற்கு வராமலிருக்க வரம்
கேட்பதாகச் சொல்லிவிடுகிறது. கடவுள்
வரமளித்துவிடுகிறார். அதன்
பின்னர் நாய்
சென்று
உண்மையான கோரிக்கையைச் சொல்லும்போது, கடவுள்
அளிக்கப்பட்ட வரத்தை
மாற்ற
மறுத்துவிடுகிறார். அதனால்
மனிதன்
மீண்டும் பிறந்தாலும் மனிதனாக இல்லாமல் வேறு
உயிராகப் பிறவி
எடுத்து வருவது
தொடங்கிவிடுகிறது. ஆப்பிரிக்கக் கண்டம்
முழுக்க இதே
கதை
அடிப்படை மாறாமல், பல்வேறு வடிவங்களில் நிலவி
வருவதாகச் சொல்லிவிட்டு, இந்தக்
கதையால் அறியப்படும் நீதி
இதுதான் என
ஆச்செபே முன்வைக்கிறார்: உன் கதையை உன் குரலில் நீயே சொல். மற்றவர்களைச் சார்ந்திருந்தால் அபாயம்தான்.
5
ஆச்சிபிக்கு சில
தலைமுறைகள் முன்பாகவே நைஜீரியர்கள் மற்ற
ஆப்பிரிக்க நாட்டவர்களைப் போலவே
கிருத்துவத்திற்கு மாறிவிட்டிருந்தாலும், ஒரு
சில
குடும்பங்கள் மட்டும் அவர்களுக்குரிய புராதன
மதத்திலிருந்து வெளியேறாமல் அதன்
ஐதீகங்களைக் கடைப்பிடித்து வந்ததை Named for Victoria, Queen of
England என்ற கட்டுரையில் எழுதுகிறார். அவர் வீட்டில் பெற்றோர்கள் அனுசரித்து வந்த
கிருத்துவ மதத்திற்கும், அவர்
வீட்டுக்கு வெளியே
அப்போதும் அதிருஷ்டவசமாகப் புழக்கத்திலிருந்த, ஆனால்
பின்வாங்கிக்கொண்டிருந்த அவர்
மூதாதையர்களின் புராதன
மதத்திற்கும் இடையே உண்டாகியிருந்த உராய்வுதான் அவரது
படைப்புலக வாழ்க்கையையே தூண்டிவிட்டது என்று
குறிப்பிட்டுள்ளார்.
ஆச்செபேயின் மாமா
கிருத்துவத்திற்கு மாற
மறுத்து, தாய்
மதத்திலேயே இருப்பவர். அவர் வீட்டில் நடக்கும் சடங்குகளில் புறச்சமய விருந்துகளில் கலந்துகொள்வது தனக்கு
என்ற
அசௌகரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆச்செபே. “நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற
சமரசமற்ற கிருத்துவ உறுதியை என்னால் அதிகம் ஏற்கமுடியவில்லை. ஆனால்
இதையே
என்
நாட்டார் மதத்தின் பணிவும் இசைவுமான கண்ணோட்டத்தோடு
என்னால் பிற்காலத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. எமது
தாய்
மதத்தில் பல்வேறு கடவுளர்கள் உண்டு.
ஒருவரிடம் நீங்கள் நெருக்கமாக, நட்பாக
இருந்தாலும் மற்றொரு கடவுளோடு உங்களுக்குச் சண்டை
வந்து
விடலாம். நீங்கள் யூடோவைத் தீவிரமாக வழிபடுவராக இருந்தாலும் வொக்வூக்வூவால் கொல்லப்படலாம். குறுகிய, வளைவு
நெகிழ்வற்ற இறுக்கமான கிருத்துவ நம்பிக்கையைவிட இத்தகைய சொல்லாடல்களும், பழமொழிகளும் மனித
வாழ்வின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள எனக்கு
உதவியாக இருந்திருக்கின்றன. இந்தப்
பன்முகப் போக்குடைய எங்கள்
புராதன
மதம்
கலாபூர்வமாக எனக்கு
திருப்தியளிப்பதாக உள்ளது.”
6
ஆச்சிபியின் வாசகர்கள் பல
வருடங்களாக அவருக்கு நோபல்பரிசு கிடைக்கும் என்று
காத்து
வந்துள்ளனர். நோபல் தேர்வுகள் பரிபூரண நியாயத்தன்மை கொண்டவை அல்ல
என்பதற்கு உதாரணமாக ஆச்செபேவுக்கும் போர்ஹெஸ்ஸிற்கும் வழங்கப்படாததையும்,
இன்னும் வேறு
சிலருக்கு வழங்கப்பட்டதையும் வைத்து
சொல்லிவிடலாம். 1987-இல் வெளிவந்த அவரது
கடைசி
நாவலான
Ant hills of the Savannah புக்கர் பரிசின் இறுதிச்சுற்று வரை
முன்னேறி வந்தாலும் பரிசு
வெல்லவில்லை. ஆனால்
இருபது
வருடங்கள் கழித்து நோபலுக்கு நகரான
'மேன்
புக்கர் இண்டர்நேஷனல்' விருது
ஆச்செபேக்கு வழங்கப்பட்டது.
தன் தேசத்து அடையாளங்களை படைப்புகளில்
மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருந்த ஆச்செபேவின் மீது ஓர் அதிருப்தியும் அவருடைய
வாசகர்களிடம் இருந்து வந்திருக்கிறது. வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு அரசியலை
புனைவுகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து எழுதிவந்த அவர் தனது சொந்த நாட்டில், தனது
சொந்த இன மக்களின் உரிமைப் போராட்டத்தை, சுதந்திரப் போராட்டத்தை
எழுதியதேயில்லையென்ற அதிருப்தி நைஜீரிய அரசியல் அறிந்த வாசகர்களுக்கு இருந்தது.
நைஜீரியாவின் எண்ணெய் வளபிக்க பயாஃப்ரா பகுதியைச் சேர்ந்தவர்தான் சினுவா ஆச்செபே.
பயாஃப்ரா பகுதிக்கு தன்னாட்சி உரிமைகோரி இக்போ இன மக்கள் அருபதுகளில் பெரும்
உள்நாட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடுமையான போருக்குப் பின் பயாஃப்ரா
தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் அமெரிக்க ஆங்கிலேய அரசுகளின் ஒத்துழைப்போடு நைஜீரிய
அரசு பயாஃப்ராவை மீண்டும் இணைத்துக்கொண்டது. இப்போரில் உயிரிழந்த இக்போவினர்
கணக்கற்றோர். அன்று பெருக்கெடுத்தோடிய ரத்த ஆற்றின் வீச்சம் இன்னும் இக்போ
இனத்தவரிடம் நீங்காமல் இருக்கிறது. ஆனால் இப்போராட்டங்கள் நிகழ்ந்த காலத்தில்
ஆச்செபே ஆதரவாகப் பேசியதோ எழுதியதோ இல்லை. பயாஃப்ரா உள்நாட்டு யுத்தம்
தொடங்குவதற்கு முன் அவருடைய A Man of the People நாவலில் மட்டும் அறுபதுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் நிலவி
வந்த
ஊழல்,
அதிகாரப் போராட்டங்களைப் பகடி செய்து எழுதியிருப்பார். நாவலின்
இறுதியில் ஒரு புரட்சி வெடிப்பதாக எழுதி தனது கடமையை முடித்துக்கொண்டார். இதைத்
தவிர ஓர் உண்மையான கலஞனுக்கு இருக்கவேண்டிய அறச்சீற்றம் பயாஃப்ரா விஷயத்தில் ஆச்செபேவுக்கு
இருந்ததில்லை என்றே சொல்லலாம். “நைஜீரியா ஒரு மிகப்பெரிய பரப்பளவு கொண்ட
நாடு.
இதில்
ஒரு
புரட்சி வெடிக்கும் என்று
நான்
உண்மையில் நம்பியதேயில்லை. நாவலுக்கு அது
பொருத்தமாக இருந்தது என்பதால் எழுதினேன்” என்று
ஆச்செபே குறிப்பிட்ட அந்நாவல் வெளியாவதற்கு ஒரு
சில
நாட்களுக்கு முன்
நிஜமாகவே பயாஃப்ரா புரட்சி நைஜீரியாவில் வெடித்தது! பாப்லோ நெரூதாவின் இறுதி
ஊர்வலம் முடிந்த கையோடு,
பினோசேவுக்கெதிராக மக்கள்
புரட்சி வெடித்ததைப் போலவே இதுவும் ஓர் ஆச்சரியகரமான நிகழ்வுதான். எழுத்தாளன் அறம்
பாடியதால்தான் புரட்சி வெடித்திருக்கிறது என்று ஆச்செபே அப்போது ஆறுதல்
அடைந்திருக்கக்கூடும்.
மற்றொரு நட்சத்திர எழுத்தாளரான வொலே சொயிங்காவும்
பூடகமான மொழியில் சில கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். (ஆனால் பயாஃப்ரா யுத்தம் நடைபெற்றபோது
பிறந்தேயிராத - 1977ஆம் ஆண்டு பிறந்த -
சீமமாண்டா அடீச்சி குரூரமாகக் கலைக்கப்பட்ட பயாஃப்ரா என்ற கனவை, அந்த இழப்பின்
வடுக்களைப் பற்றி இரண்டு நாவல்கள் Purple
Hibiscus மற்றும் Half of the Yellow Sun என்று எழுதிவிட்டார்).
ஆனால் இந்தக் குற்றவுணர்வு ஆச்செபேவை
வாழ்நாள் முழுக்கவும் சித்திரவதை செய்து வந்திருக்கிறது என்பது அவருடைய கடைசி
புத்தகத்தில் வெளிப்பட்டது. குந்தர் கிராஸ் நாஜி படையில் பணியாற்ற நேர்ந்ததை தன்
மறைவுக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படுத்தியதைப் போலவே ஆச்செபே அவரது
மறைவுக்கு ஒரு வருடம் முன்பக There Was A
Country என்ற தலைப்பில் தனது சொந்த பயாஃப்ரா அனுபவங்களை எழுதி கழுவாய்
தேடிக்கொண்டார்.
( உயிர் எழுத்து, மே 2013 )
கருத்துகள்
கருத்துரையிடுக