இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  சின்ன விஷயங்களின் 25 வருடங்கள் ஜி . குப்புசாமி அருந்ததி ராயின் நாவல் God of Small Things வெளிவந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன . மிகப் பரவலான கவனத்தை இந்நாவல் பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது இதற்குக் கிடைத்த புக்கர் பரிசு . சர்வதேச அளவில் மிகவும் பெருமைமிக்க மேன் புக்கர் பரிசை ஓர் இந்திய நாவல் வெல்வது அதுவே முதல்முறை . நாவலின் களம் கேரளத்தில்   அய்மனம் என்ற   சிறு நகரம் . மீனச்சல் என்ற காட்டாறு நாவலின்   பாத்திரமாகவே வருகிறது . மிகவும் துயரார்ந்த சம்பவங்களுக்கு   ஆறு சாட்சியாக இருக்கிறது . சிலவற்றில் பங்கெடுத்துக் கொள்ளவும் செய்கிறது . அந்த துர்நிகழ்வுகளுக்குப் பிறகு எஸ்தா என்ற எஸ்தப்பன் கல்கத்தாவில் இருக்கும் அவனுடைய அப்பாவிடம் தனியாக மெட்ராஸ் மெயிலில் அனுப்பிவைக்கப் படுகிறான் . இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து அய்மனத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறான் . எஸ்தாவை பல வருடங்கள் கழித்து சந்திக்கும் அவனுடைய இரட்டைச் சகோதரி ராஹேலுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்போது   ம...