தமிழ் இந்து நேர்காணல்
இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணல்: ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல்வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தெரியக்கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி தெரிவதில்லை. அப்படித்தான். இதனாலோ என்னவோ நாங்கள் கண்ணாடியைப் பார்க்காமல் விடுவதுபோல மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இனிமேல் பிம்பத்தைப் பார்ப்போம். ரசிப்போம். அத்துடன் தவறாமல் கண்ணாடியையும் பார்ப்போம். ஏனென்றால் கண்ணாடிதான் மொழிபெயர்ப்பாளர். - அ.முத்துலிங்கம் மொழிபெயர்ப்பில் எழுத்தாளரைப் பிரதானப்படுத்தி தன்னை மறைத்துக்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. மொழிபெயர்ப்பை மனதார நேசிக்காமல் வேலையாகக் கருதும் எவராலும் சிறப்பான மொழிபெயர்ப்ப...