இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  நிசப்தம் ஜூலியன் பார்ன்ஸ் (தமிழில்: ஜி.குப்புசாமி)   ஒவ்வொரு வருடம் கழியும் போதும் ஓர் உணர்வு மட்டும் எனக்குள் கூடிக்கொண்டே வருகிறது – நாரைகளைக் காணவேண்டுமென்கிற ஏக்கம். வருடத்தின் இந்தப் பருவத்தில்தான் அவை வரத்துவங்கும். குன்றின் மீது ஏறி நின்று கொண்டு வானத்தைப் பார்க்கிறேன். இன்றும் அவை வரவில்லை. காட்டுவாத்துகள்தாம் தென்படுகின்றன. வாத்துகள் அழகானவைதான்; நாரைகள் இல்லாதபோது.   ஓர் இளம் பத்திரிகை நிருபர் பொழுதைக் கழிப்பதற்கு எனக்கு உதவியாக இருந்தான். ஹோமரைப் பற்றிப் பேசினோம், ‘ஜாஸ்’ஸைப் பற்றிப் பேசினோம்.The Jazz Singer இல் எனது இசைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் இளைஞர்களின் அறியாமை என்னைக் கிளர்ச்சியடையவைக்கிறது. இத்தகைய அறியாமையும் ஒருவித நிசப்தம்தான்.          இரண்டு மணிநேரம் கழித்து ஒரு பூடகமான கேலிக்குரலில் எனது புதிய இசையமைப்பைப் பற்றிக் கேட்டான். நான் புன்னகைத்தேன். எட்டாவது சிம்ஃபொனியைப் பற்றிக்கேட்டான். இசையை பட்டாம்பூச்சியின் சிறகோடு ஒப்பிட்டுச் சொன்னேன். விமர்சகர்கள் ந...