இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை

  நவீனஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை   ஜி . குப்புசாமி   ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் உருவாக்கிய தேய்வழக்குகளை விசுவாசமாக நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில் உள்ள பலதரப்பட்ட நுண் அரசியற் கூறுகள் இன்னமும்கூட நம்மால் முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை எனலாம். 'இருண்ட கண்டம்' என்ற ஒரே சொல்லாட்சியின் கீழ் மறைக்கப்பட்டிருந்த உலகின் மூத்த குடியின் வேர்களும், அவர்களின் எண்ணற்ற கடவுளர்களும், இனக்குழுக்களின் பாரம்பரியங்களும் , கலாச்சாரங்களும் காலனியாளர்களால் அநாகரிகங்கள் என்ற பெயரில் அழித்ததையும், தம் நாட்டு மொழிகளையும் மதங்களையும் அவர்களின் மேல் திணித்ததையும், ஓர் இனமாக வாழ்ந்து வந்த அப்பழங்குடிகள் தமக்குள் பிளவுண்டதையும் புதைசேற்றிலிருந்து தோண்டியெடுக்கப்படும் புராதன பொருட்களைப் போல இன்றைய ஆப்பிரிக்கப் படைப்புகள் மீட்டெடுத்து வருகின்றன.   தென் அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பிய ஆதிக்க நாடுகளால் காலனியாக்கம் செய்யப்பட்ட பூமி. பாரம்பரியம் மிக்க ஆப்பிரிக்கச் சமூகத்தின் மீது மேற்கத்தைய வழக்கங்களும் மதிப்பீடுகள...

தமிழ் இந்து நேர்காணல்

  இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணல்:                         ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல்வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தெரியக்கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி தெரிவதில்லை. அப்படித்தான். இதனாலோ என்னவோ நாங்கள் கண்ணாடியைப் பார்க்காமல் விடுவதுபோல மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இனிமேல் பிம்பத்தைப் பார்ப்போம். ரசிப்போம். அத்துடன் தவறாமல் கண்ணாடியையும் பார்ப்போம். ஏனென்றால் கண்ணாடிதான் மொழிபெயர்ப்பாளர்.   - அ.முத்துலிங்கம்     மொழிபெயர்ப்பில் எழுத்தாளரைப் பிரதானப்படுத்தி தன்னை மறைத்துக்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. மொழிபெயர்ப்பை மனதார நேசிக்காமல் வேலையாகக் கருதும் எவராலும் சிறப்பான மொழிபெயர்ப்ப...

கனலி இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்

  கனலி இணைய இதழ் ஜூன் 16, 2020 :   ஜி.குப்புசாமி அவர்களுடனான நேர்காணல்   கேள்வி – வணக்கம் சார். வாசிப்புக்குள் நீங்கள் வந்தது பற்றியும் அதன் பின்னணி பற்றி யு ம் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் சிறு குறிப்பு தர முடியுமா ?   பதில் – வணக்கம். வாசிப்பு என்பது எனக்கு இடையில் வந்த விஷயம் அல்ல. என்னுடைய குடும்பச்சூழல் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே வாசிப்பை நோக்கிதான் நகர்த்தியிருந்தது என்று சொல்லலாம். என்னுடைய அப்பா நல்ல வாசகர். என் அப்பாவும் தாத்தாவும் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை என்றாலும் இருவருமே அந்தக் காலத் தில் SSLC   படித்தவர்கள். எங்கள் தாத்தா 1930- களிலே SSLC முடித்திருக்கிறார். என்னுடைய அப்பா பள்ளியிலும் மாவட்டத்திலும் முதல் மாணவனாய்த் தேறியவர். ஆனால் அவருடைய குடும்பச்சூழல் காரணமாக கல்லூரியில் படிக்கமுடியாமல் போனது. அதனாலேயே அவருக்கு ஆங்கில வாசிப்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. எங்கள் அப்பா , தாத்தா இருவருமே Anglophiles. ஆரணி மாதிரியான சின்ன ஊரில் பஜாரில் கடை வைத்திருக்கும் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஆங்கிலப்புத்தக வாசிப்பில் பெரு...