மாணவனின் மனைவி
மாணவனின் மனைவி ரேமண்ட் கார்வர் ( தமிழில்: ஜி.குப்புசாமி) தன் அபிமானக் கவிஞரான ரில்கேவை அவளுக்காக அவன் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தபோதே தலையணையில் சாய்ந்து தூங்கிப்போனாள். அவனுக்கு வாய்விட்டு உரக்க வாசிக்கப் பிடிக்கும். நன்றாகவும் வாசிப்பான் – தன்னம்பிக்கை மிகுந்த கணீரென்ற குரல். சில முறை தாழ்ந்து துயரார்ந்தும் , சிலமுறை உயர்ந்தும் , சிலமுறை துடிப்போடும் ஒலிக்கும். வாசிக்கும்போது நூலின் பக்கத்திலிருந்து அவன் பார்வை விலகவே விலகாது. மேசையிலிருந்து சிகரெட்டை எடுப்பதற்காக மட்டும் வாசிப்பு தடைப்படும். அந்தக் கம்பீரக் குரல் ஏதோவொரு கோட்டை நகரின் மதிற்சுவரைக் கடந்து கூண்டுவண்டிகளில் தாடிக்கார மனிதர்கள் சாரிசாரியாக வந்...