இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை

  நவீனஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை   ஜி . குப்புசாமி   ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் உருவாக்கிய தேய்வழக்குகளை விசுவாசமாக நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில் உள்ள பலதரப்பட்ட நுண் அரசியற் கூறுகள் இன்னமும்கூட நம்மால் முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை எனலாம். 'இருண்ட கண்டம்' என்ற ஒரே சொல்லாட்சியின் கீழ் மறைக்கப்பட்டிருந்த உலகின் மூத்த குடியின் வேர்களும், அவர்களின் எண்ணற்ற கடவுளர்களும், இனக்குழுக்களின் பாரம்பரியங்களும் , கலாச்சாரங்களும் காலனியாளர்களால் அநாகரிகங்கள் என்ற பெயரில் அழித்ததையும், தம் நாட்டு மொழிகளையும் மதங்களையும் அவர்களின் மேல் திணித்ததையும், ஓர் இனமாக வாழ்ந்து வந்த அப்பழங்குடிகள் தமக்குள் பிளவுண்டதையும் புதைசேற்றிலிருந்து தோண்டியெடுக்கப்படும் புராதன பொருட்களைப் போல இன்றைய ஆப்பிரிக்கப் படைப்புகள் மீட்டெடுத்து வருகின்றன.   தென் அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பிய ஆதிக்க நாடுகளால் காலனியாக்கம் செய்யப்பட்ட பூமி. பாரம்பரியம் மிக்க ஆப்பிரிக்கச் சமூகத்தின் மீது மேற்கத்தைய வழக்கங்களும் மதிப்பீடுகள...